நூல்கள்›புறநானூறு›பாடல் 2485

பாடல் 2485

நெடு நீர நிறை கயத்துப்

படு மாரித் துளி போல,

நெய் துள்ளிய வறை முகக்கவும்,

சூடு கிழித்து வாடுஊன் மிசையவும்,

ஊன் கொண்ட வெண் மண்டை . . . .

ஆன் பயத்தான் முற்று அழிப்பவும்,

வெய்து உண்ட வியர்ப்பு அல்லது,

செய் தொழிலான் வியர்ப்பு அறியாமை

ஈத்தோன் எந்தை, இசைதனது ஆக;

வயலே நெல்லின் வேலி, நீடிய கரும்பின் . . . .

பாத்திப் பன்மலர்ப் பூத்த துப்பின;

புறவே, புல்லருந்து பல்லா யத்தான்,

வில்இருந்த வெங்குறும் பின்று;

கடலே, கால்தந்த கலம் எண்ணுவோர்

கானற் புன்னைச் சினைநிலக் குந்து; . . . .

கழியே, சிறுவெள் உப்பின் கொள்ளை சாற்றி,

பெருங்கல் நன்னாட்டு உமண்ஒலிக் குந்து;

அன்னநன் நாட்டுப் பொருநம், யாமே;

பொரா அப் பொருந ரேம்,

குணதிசை நின்று குடமுதற் செலினும், . . . .

வடதிசை நின்று தென்வயிற் செலினும்,

தென்திசை நின்று குறுகாது நீடினும்,

யாண்டும் நிற்க, வெள்ளி; யாம்

வேண்டியது உணர்ந்தோன் தாள்வா ழியவே!

வேண்டியது உணர்ந்தோன்!

← பாடல் 2484பாடல் 2486 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்