பாடல் 2484
வெள்ளி தோன்றப் புள்ளுக் குரல் இயம்ப
புலரி விடியல் பகடு பல வாழ்த்தித்
தன் கடைத் தோன்றினும் இலனே பிறன் கடை
அகன் கண் தடாரிப் பாடு கேட்டு அருளி
வறன் யான் நீங்கல் வேண்டி என் அரை . . . .
நிலந்தினச் சிதைந்த சிதாஅர் களைந்து
வெளியது உடீஇ என் பசி களைந்தோனே
காவிரி அணையும் தாழ் நீர்ப் படப்பை
நெல் விளை கழனி அம்பர் கிழவோன்
நல் அரு வந்தை வாழியர் புல்லிய . . . .
வேங்கட விறல் வரைப் பட்ட
ஓங்கல் வானத்து உறையினும் பலவே.
காவிரி அணையும் படப்பை!