நூல்கள்›புறநானூறு›பாடல் 2483

பாடல் 2483

மென் பாலான் உடன் அணை இ,

வஞ்சிக் கோட்டு உறங்கும் நாரை

அறைக் கரும்பின் பூ அருந்தும்;

வன் பாலான் கருங்கால் வரகின்

.. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. . . . .

அங்கண் குறுமுயல் வெருவ, அயல

கருங்கோட்டு இருப்பைப் பூஉறைக் குந்து;

விழவின் றாயினும், உழவர் மண்டை

இருங்கெடிற்று மிசையொடு பூங்கள் வைகுந்து;

.. .. .. .. .. .. .. .. கிணையேம் பெரும! . . . .

நெல் என்னாம், பொன் என்னாம்,

கனற்றக் கொண்ட நறவு என்னும்,

.. .. .. .. .. .. மனை என்னா, அவை பலவும்

யான் தண்டவும், தான் தண்டான்,

நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை . . . .

மண் நாணப் புகழ் வேட்டு,

நீர் நாண நெய் வழங்கிப்,

புரந்தோன் எந்தை; யாம் எவன் தொலைவதை;

அன்னோனை உடையேம் என்ப; இனி வறட்கு

யாண்டு நிற்க வெள்ளி, மாண்ட . . . .

உண்ட நன்கலம் பெய்து நுடக்கவும்.

வந்த வைகல் அல்லது,

சென்ற எல்லைச் செலவு அறி யேனே!

நெல் என்னாம்! பொன் என்னாம்!

← பாடல் 2482பாடல் 2484 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்