நூல்கள்›புறநானூறு›பாடல் 2480

பாடல் 2480

ஊனும் ஊணும் முனையின், இனிதெனப்,

பாலிற் பெய்தவும், பாகிற் கொண்டவும்

அளவுபு கலந்து, மெல்லிது பருகி,

விருந்து உறுத்து, ஆற்ற இருந்தென மாகச்,

சென்மோ, பெரும! எம் விழவுடை நாட்டு? என, . . . .

யாம்தன் அறியுநமாகத் தான் பெரிது

அன்புடை மையின், எம்பிரிவு அஞ்சித்

துணரியது கொளாஅ வாகிப், பழம்ஊழ்த்துப்,

பயம்பகர் வறியா மயங்கரில் முதுபாழ்ப்

பெயல்பெய் தன்ன, செல்வத்து ஆங்கண் . . . .

ஈயா மன்னர் புறங்கடைத் தோன்றிச்,

சிதாஅர் வள்பின் சிதர்ப்புறத் தடாரி

ஊன்சுகிர் வலந்த தெண்கண் ஒற்றி,

விரல்விசை தவிர்க்கும் அரலையில் பாணியின்,

இலம்பாடு அகற்றல் யாவது? புலம்பொடு . . . .

தெருமரல் உயக்கமும் தீர்க்குவெம்; அதனால்,

இருநிலம் கூலம் பாறக், கோடை

வருமழை முழக்கு இசைக்கு ஓடிய பின்றைச்,

சேயை யாயினும், இவணை யாயினும்

இதற்கொண்டு அறிநை; வாழியோ, கிணைவ! . . . .

சிறுநனி, ஒருவழிப் படர்க என் றோனே - எந்தை,

ஒலிவெள் அருவி வேங்கட நாடன்;

உறுவரும் சிறுவரும் ஊழ்மாறு உய்க்கும்

அறத்துறை அம்பியின் மான, மறப்பின்று,

இருங்கோள் ஈராப் பூட்கைக் . . . .

கரும்பன் ஊரன் காதல் மகனே!

கரும்பனூரன் காதல் மகன்!

← பாடல் 2479பாடல் 2481 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்