நூல்கள்›புறநானூறு›பாடல் 2481

பாடல் 2481

கடல் படை அடல் கொண்டி,

மண் டுற்ற மலிர் நோன்றாள்,

தண் சோழ நாட்டுப் பொருநன்,

அலங்கு உளை அணி இவுளி

நலங் கிள்ளி நசைப் பொருநரேம்; . . . .

பிறர்ப் பாடிப் பெறல் வேண்டேம்

அவற் பாடுதும், அவன் தாள் வாழிய! என!

நெய் குய்ய ஊன் நவின்ற

பல்சோற்றான், இன் சுவைய

நல் குரவின் பசித் துன்பின் நின் . . . .

முன்நாள் விட்ட மூதறி சிறா அரும்,

யானும், ஏழ்மணி யங்கேள், அணிஉத்திக்,

கட்கேள்விக், சுவை நாவின்

நிறன் உற்ற, அரா அப் போலும்

வறன் ஒரீ இ, வழங்கு வாய்ப்ப, . . . .

விடுமதி அத்தை, கடுமான் தோன்றல்!

நினதே, முந்நீர் உடுத்த இவ் வியன் உலகு, அறிய;

எனதே, கிடைக்காழ் அன்ன தெண்கண் மாக்கிணை

கண்ணகத்து யாத்த நுண் அரிச் சிறுகோல்

எறிதொறும் நுடங்கி யாங்கு, நின் பகைஞர் . . . .

கேட்டொறும் நடுங்க, ஏத்துவென்,

வென்ற தேர், பிறர் வேத்தவை யானே.

கேட்டொறும் நடுங்க ஏத்துவேன்!

← பாடல் 2480பாடல் 2482 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்