நூல்கள்›புறநானூறு›பாடல் 2467

பாடல் 2467

களிறு முகந்து பெயர்குவம் எனினே.

ஒளிறுமழை தவிர்க்கும் குன்றம் போலக்,

கைம்மா எல்லாம் கணையிடத் தொலைந்தன;

கொடுஞ்சி நெடுந்தேர் முகக்குவம் எனினே;

கடும்பரி நன்மான் வாங்குவயின் ஒல்கி . . . .

நெடும்பீடு அழிந்து, நிலம்சேர்ந் தனவே;

கொய்சுவல் புரவி முகக்குவம் எனினே,

மெய்நிறைந்த வடுவொடு பெரும்பிறி தாகி,

வளிவழக் கறுத்த வங்கம் போலக்

குருதியம் பெரும்புனல் கூர்ந்தனவே; ஆங்க . . . .

முகவை இன்மையின் உகவை இன்றி,

இரப்போர் இரங்கும் இன்னா வியன்களத்து,

ஆள்அழிப் படுத்த வாளேர் உழவ!

கடாஅ யானைக் கால்வழி யன்னவென்

தெடாரித் தெண்கண் தெளிர்ப்ப வொற்றிப், . . . .

பாடி வந்த தெல்லாம், கோடியர்

முழவுமருள் திருமணி மிடைந்தநின்

அரவுறழ் ஆரம் முகக்குவம் எனவே.

பாடி வந்தது இதற்கோ?

← பாடல் 2466பாடல் 2468 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்