நூல்கள்›புறநானூறு›பாடல் 2466

பாடல் 2466

நாகத் தன்ன பாகார் மண்டிலம்

தமவே யாயினும் தம்மொடு செல்லா;

வெற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்;

ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்

பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து, . . . .

பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய

நாரறி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து,

இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி,

வாழ்தல் வேண்டும், இவண் வரைந்த வைகல்;

வாழச் செய்த நல்வினை அல்லது, . . . .

ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை;

ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப் பாளர்

முத்தீப் புரையக் காண்தக இருந்த

கொற்ற வெண்குடக் கொடித்தேர் வேந்திர்;

யான் அறி அளவையோ இவ்வே; வானத்து . . . .

வயங்கித் தோன்றும் மீனினும், இம்மெனப்

பரந்து இயங்கும் மாமழை உறையினும்,

உயர்ந்து மேந்தோன்றிப் பொலிக, நும் நாளே!

வாழச் செய்த நல்வினை!

← பாடல் 2465பாடல் 2467 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்