பாடல் 2465
விழுக்கடிப்பு அறைந்த முழுக்குரல் முரசம்
ஒழுக்குடை மருங்கின் ஒருமொழித் தாக,
அரவுஎறி உருமின் உரறுபு சிலைப்ப,
ஒருதா மாகிய பெருமை யோரும்,
தம்புகழ் நிறீஇச் சென்றுமாய்ந் தனரே; . . . .
அதனால், அறிவோன் மகனே! மறவோர் செம்மால்!
.. .. .. .. .. .. .. .. உரைப்பக் கேண்மதி;
நின் ஊற்றம் பிறர் அறியாது,
பிறர் கூறிய மொழி தெரியா,
ஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவி, . . . .
இரவின் எல்லை வருவது நாடி,
உரை .. .. .. .. .. .. .. .. .. .. ..
உழவொழி பெரும்பகடு அழிதின் றாங்குச்,
செங்கண் மகளிரொடு சிறுதுளி அளைஇ,
அங்கள் தேறல் ஆங்கலத்து உகுப்ப, . . . .
கெடல் அருந் திருவ .. .. .. .. .. ..
மடை வேண்டுநர்க்கு இடை அருகாது,
அவிழ் வேண்டுநர்க்கு இடை அருளி
விடை வீழ்த்துச் சூடு கிழிப்ப,
நீர்நீலை பெருத்த வார்மணல் அடைகரைக், . . . .
காவு தோறும் .. .. .. .. .. .. .. ..
மடங்கல் உண்மை மாயமோ அன்றே.
மாயமோ அன்றே!