நூல்கள்›புறநானூறு›பாடல் 2464

பாடல் 2464

மயங்குஇருங் கருவிய விசும்புமுக னாக,

இயங்கிய இருசுடர் கண் எனப், பெயரிய

வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம்,

வயிரக் குறட்டின் வயங்குமணி யாரத்து

பொன்னந் திகிரி முன்சமத்து உருட்டிப், . . . .

பொருநர்க் காணாச் செருமிகு முன்பின்

முன்னோர் செல்லவும், செல்லாது, இன்னும்

விலைநலப் பெண்டிரிற் பலர்மீக் கூற,

உள்ளேன் வாழியர், யான் எனப் பன்மாண்

நிலமகள் அழுத காஞ்சியும் . . . .

உண்டென உரைப்பரால், உணர்ந்திசி னோரே.

நிலமகள் அழுத காஞ்சி!

← பாடல் 2463பாடல் 2465 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்