நூல்கள்›புறநானூறு›பாடல் 2463

பாடல் 2463

வாடா மாலை பாடினி அணியப்,

பாணன் சென்னிக் கேணி பூவா

எரிமருள் தாமரைப் பெருமலர் தயங்க,

மைவிடை இரும்போத்துச் செந்தீச் சேர்த்திக்,

காயங் கனிந்த கண்ணகன் கொழுங்குறை . . . .

நறவுண் செவ்வாய் நாத்திறம் பெயர்ப்ப

உண்டும், தின்றும், இரப்போர்க்கு ஈந்தும்,

மகிழ்கம் வம்மோ, மறப்போ ரோயே!

அரிய வாகலும் உரிய பெரும!

நிலம்பக வீழ்ந்த அலங்கல் பல்வேர் . . . .

முதுமரப் பொத்தின் கதுமென இயம்பும்

கூகைக் கோழி ஆனாத்

தாழிய பெருங்கா டெய்திய ஞான்றே.

மகிழகம் வம்மோ!

← பாடல் 2462பாடல் 2464 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்