நூல்கள்›புறநானூறு›பாடல் 2461

பாடல் 2461

ஞாயிற்றுஅன்ன ஆய்மணி மிடைந்த

மதியுறழ் ஆரம் மார்பில் புரளப்,

பலிபெறு முரசம் பாசறைச் சிலைப்பப்,

பொழிலகம் பரந்த பெருஞ்செய் ஆடவர்

செருப்புகன்று எடுக்கும் விசய வெண்கொடி . . . .

அணங்குஉருத் தன்ன கணங்கொள் தானை,

கூற்றத் தன்ன மாற்றரு முன்பன்,

ஆக்குரல் காண்பின் அந்த ணாளர்

நான்மறை குறித்தன்று அருளாகா மையின்

அறம்குறித் தன்று; பொருளா குதலின் . . . .

மருள் தீர்ந்து, மயக்கு ஒரீஇக்,

கைபெய்த நீர் கடற் பரப்ப,

ஆம் இருந்த அடை நல்கிச்,

சோறு கொடுத்து, மிகப் பெரிதும்

வீறுசான் நன்கலம் வீசி நன்றும், . . . .

சிறுவெள் என்பின் நெடுவெண் களரின்,

வாய்வன் காக்கை கூகையொடு கூடிப்

பகலும் கூவும் அகலுள் ஆங்கண்,

காடுகண் மறைத்த கல்லென் சுற்றமொடு

இல்என்று இல்வயின் பெயர; மெல்ல . . . .

இடஞ்சிறிது ஒதுங்கல் அஞ்சி,

உடம்பொடும் சென்மார், உயர்ந்தோர் நாட்டே.

உடம்பொடுஞ் சென்மார்!

← பாடல் 2460பாடல் 2462 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்