நூல்கள்›புறநானூறு›பாடல் 2460

பாடல் 2460

கார் எதிர் உருமின் உரறிக், கல்லென,

ஆருயிர்க்கு அலமரும் ஆராக் கூற்றம்!

நின்வரவு அஞ்சலன் மாதோ; நன்பல

கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு,

அருங்கலம் நீரொடு சிதறிப், பெருந்தகைத் . . . .

தாயின்நன்று பலர்க்கு ஈத்துத்,

தெருணடை மாகளிறொடு தன்

அருள் பாடுநர்க்கு நன்கு அருளியும்,

உருள்நடைப் ப்றேர் ஒன்னார்க் கொன்றுதன்

தாள் சேருநர்க்கு இனிது ஈத்தும், . . . .

புரி மாலையர் பாடி னிக்குப்

பொலந் தாமரைப் பூம் பாணரொடு

கலந் தளைஇய நீள் இருக் கையால்

பொறையொடு மலிந்த கற்பின், மான்நோக்கின்,

வில்என விலங்கிய புருவத்து, வல்லென, . . . .

நல்கின் நாஅஞ்சும் முள்எயிற்று, மகளிர்

அல்குல் தாங்கா அசைஇ, மெல்லென

கலங்கலந் தேறல் பொலங்கலத்து ஏந்தி,

அமிழ்தென மடுப்ப மாந்தி, இகழ்விலன்,

நில்லா உலகத்து நிலையாமைநீ . . . .

சொல்லா வேண்டா தோன்றல், முந்துஅறிந்த

முழுதுஉணர் கேள்வியன் ஆகலின் விரகினானே.

முள் எயிற்று மகளிர்!

← பாடல் 2459பாடல் 2461 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்