நூல்கள்›புறநானூறு›பாடல் 2459

பாடல் 2459

பெரிது ஆராச் சிறு சினத்தர்,

சில சொல்லால் பல கேள்வியர்,

நுண் ணுணர்வினாற் பெருங் கொடையர்

கலுழ் நனையால் தண் தேறலர்,

கனி குய்யாற் கொழுந் துவையர், . . . .

தாழ் உவந்து தழூஉ மொழியர்,

பயன் உறுப்பப் பலர்க்கு ஆற்றி

ஏம மாக இந்நிலம் ஆண்டோர்

சிலரே; பெரும! கேள் இனி; நாளும்,

பலரே தகை அது அறியா தோரே! . . . .

அன்னோர் செல்வமும் மன்னி நில்லாது;

இன்னும் அற்று, அதன் பண்பே; அதனால்

நிச்சமும் ஒழுக்கம் முட்டிலை; பரிசில்

நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்புமதி; அச்சுவரப்

பாறுஇறை கொண்ட பறந்தலை, மாகத . . . .

கள்ளி போகிய களரி மருங்கின்,

வெள்ளில் நிறுத்த பின்றைக், கள்ளொடு

புல்லகத்து இட்ட சில்லவிழ் வல்சி,

புலையன் ஏவப் புன்மேல் அமர்ந்துண்டு,

அழல்வாய்ப் புக்க பின்னும், . . . .

பலர்வாய்த்து இராஅர், பகுத்துஉண் டோரே.

பலர் வாய்த்திரார்!

← பாடல் 2458பாடல் 2460 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்