நூல்கள்›புறநானூறு›பாடல் 2458

பாடல் 2458

பாறுபடப் பறைந்த பன்மாறு மருங்கின்,

வேறுபடு குரல வெவ்வாய்க் கூகையொடு

பிணந்தின் குறுநரி நிணம்திகழ் பல்ல,

பேஎய் மகளிர் பிணம்தழூஉப் பற்றி,

விளர்ஊன் தின்ற வெம்புலால் மெய்யர் . . . .

களரி மருங்கில் கால்பெயர்த் தாடி,

ஈம விளக்கின் வெருவரப் பேரும்

காடுமுன் னினரே, நாடுகொண் டோரும்!

நினக்கும் வருதல் வைகல் அற்றே;

வசையும் நிற்கும், இசையும் நிற்கும்; . . . .

அதனால் வசைநீக்கி இசைவேண்டியும்,

நசை வேண்டாது நன்று மொழிந்தும்,

நிலவுக் கோட்டுப் பலகளிற் றோடு,

பொலம் படைய மா மயங்கிட,

இழைகிளர் நெடுந்தேர் இரவலர்க்கு அருகாது . . . .

கொள் என விடுவை யாயின், வெள்ளென

ஆண்டுநீ பெயர்ந்த பின்னும்,

ஈண்டுநீடு விளங்கும், நீ எய்திய புகழே.

நீடு விளங்கும் புகழ்!

← பாடல் 2457பாடல் 2459 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்