நூல்கள்›புறநானூறு›பாடல் 2449

பாடல் 2449

தூர்ந்த கிடங்கின், சோர்ந்த ஞாயில்,

சிதைந்த இஞ்சிக், கதுவாய் மூதூர்

யாங்கா வதுகொல் தானே, தாங்காது?

படுமழை உருமின் இறங்கு முரசின்

கடுமான் வேந்தர் காலை வந்து, எம் . . . .

நெடுநிலை வாயில் கொட்குவர் மாதோ;

பொருதாது அமருவர் அல்லர்; போர் உழந்து

அடுமுரண் முன்பின் தன்னையர் ஏந்திய

வடிவேல் எகின் சிவந்த உண்கண்,

தொடியுறழ் முன்கை, இளையோள் . . . .

அணிநல் லாகத்து அரும்பிய சுணங்கே.

வாயிற் கொட்குவர் மாதோ!

← பாடல் 2448பாடல் 2450 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்