நூல்கள்›புறநானூறு›பாடல் 2448

பாடல் 2448

நுதி வேல் கொண்டு நுதல் வியர் துடையாக்

கடிய கூறும் வேந்தே, தந்தையும்

நெடிய அல்லது பணிந்து மொழியலனே,

இஃது இவர் படிவம் ஆயின், வை எயிற்று,

அரி மதர் மழைக்கண், அம் மா அரிவை, . . . .

மரம் படு சிறு தீப் போல,

அணங்காயினள், தான் பிறந்த ஊர்க்கே.

ஊர்க்கு அணங்காயினள்!

← பாடல் 2447பாடல் 2449 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்