பாடல் 2446
உண்போன் தான்நறுங் கள்ளின் இடச்சில
நாஇடைப் பறேர் கோலச் சிவந்த
ஒளிறுஒள் வாடக் குழைந்தபைந் தும்பை,
எறிந்துஇலை முறிந்த கதுவாய் வேலின்.
மணநாறு மார்பின், மறப்போர் அகுதை . . . .
குண்டுநீர் வரைப்பின், கூடல் அன்ன
குவைஇருங் கூந்தல் வருமுலை செப்ப,
.. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. ..
என்னா வதுகொல் தானே? .. .. .. .. .. .. ..
விளங்குறு பராரைய வாயினும், வேந்தர் . . . .
வினைநவில் யானை பிணிப்ப,
வேர்துளங் கினநம் ஊருள் மரனே.
வேர் துளங்கின மரனே!