நூல்கள்›புறநானூறு›பாடல் 2442

பாடல் 2442

மீன் நொடுத்து நெல் குவைஇ

மிசை யம்பியின் மனைமறுக் குந்து!

மனைக் கவைஇய கறிமூ டையால்.

கலிச் சும்மைய கரைகலக் குறுந்து

கலந் தந்த பொற் பரிசம் . . . .

கழித் தொணியான் கரைசேர்க் குந்து;

மலைத் தாரமும் கடல் தாரமும்

தலைப் பெய்து, வருநர்க்கு ஈயும்

புனலங் கள்ளின் பொலந்தார்க் குட்டுவன்

முழங்கு கடல் முழவின் முசிறி யன்ன, . . . .

நலஞ்சால் விழுப்பொருள் பணிந்து கொடுப்பினும்,

புரையர் அல்லோர் வரையலள், இவள் எனத்

தந்தையும் கொடாஅன் ஆயின் - வந்தோர்,

வாய்ப்ப இறுத்த ஏணி ஆயிடை

வருந்தின்று கொல்லோ தானே - பருந்துஉயிர்த்து . . . .

இடைமதில் சேக்கும் புரிசைப்

படைமயங்கு ஆரிடை நெடுநல் ஊரே?

ஏணி வருந்தின்று!

← பாடல் 2441பாடல் 2443 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்