நூல்கள்›புறநானூறு›பாடல் 2441

பாடல் 2441

கானக் காக்கைக் கலிச்சிறகு ஏய்க்கும்

மயிலைக் கண்ணிப், பெருந்தோட் குறுமகள்,

ஏனோர் மகள்கொல் இவள்? என விதுப்புற்று,

என்னொடு வினவும் வென்வேல் நெடுந்தகை;

திருநயத் தக்க பண்பின் இவள் நலனே . . . .

பொருநர்க்கு அல்லது, பிறர்க்கு ஆகாதே;

பைங்கால் கொக்கின் பகுவாய்ப் பிள்ளை

மென்சேற்று அடைகரை மேய்ந்துஉண் டதற்பின்,

ஆரல் ஈன்ற ஐயவி முட்டை,

கூர்நல் இறவின் பிள்ளையொடு பெறூஉம், . . . .

தன்பணைக் கிழவன்இவள் தந்தையும்; வேந்தரும்

பெறாஅ மையின் பேரமர் செய்தலின்,

கழிபிணம் பிறங்கு போர்பு அழிகளிறு எருதா,

வாள்தக வைகலும் உழக்கும்

மாட்சி யவர் இவள் தன்னை மாரே . . . .

வாள்தக உழக்கும் மாட்சியர்!

← பாடல் 2440பாடல் 2442 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்