நூல்கள்›புறநானூறு›பாடல் 2436

பாடல் 2436

ஆர்கலி யினனே, சோணாட்டு அண்ணல்;

கவிகை மண்ணாள் செல்வ ராயினும்,

வாள்வலத்து ஒழியப் பாடிச் சென்றாஅர்.

வரலதோறு அகம் மலர .. .. .. .. .. .. ..

ஈதல் ஆனா இலங்குதொடித் தடக்கைப் . . . .

பாரி பறம்பின் பனிச்சுனை போலக்,

காண்டற்கு அரியளாகி, மாண்ட

பெண்மை நிறைந்த பொலிவொடு, மண்ணிய

துகில்விரி கடுப்ப நுடங்கித், தண்ணென

அகிலார் நறும்புகை ஐதுசென்று அடங்கிய . . . .

கபில நெடுநகர்க் கமழும் நாற்றமொடு,

மனைச்செறிந் தனளே, வாணுதல்; இனியே.

அற்றன் றாகலின், தெற்றெனப் போற்றிக்,

காய்நெல் கவளம் தீற்றிக், காவுதொறும்

கடுங்கண் யானை காப்பனர் அன்றி, . . . .

வருத லானார் வேந்தர்; தன்னையர்

பொருசமம் கடந்த உருகெழு நெடுவேல்

குருதி பற்றிய வெருவரு தலையர்

மற்றுஇவர் மறனும் இற்றால்; தெற்றென

யாரா குவர்கொல் தாமே - நேரிழை . . . .

உருத்த பல்சுணங்கு அணிந்த

மருப்புஇள வனமுலை ஞெமுக்கு வோரே?

இவர் மறனும் இற்று!

← பாடல் 2435பாடல் 2437 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்