நூல்கள்›புறநானூறு›பாடல் 2435

பாடல் 2435

வேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே;

கடவன கழிப்புஇவள் தந்தையும் செய்யான்;

ஒளிறுமுகத்து ஏந்திய வீங்குதொடி மருப்பின்

களிறும் கடிமரம் சேரா; சேர்ந்த

ஒளிறுவேல் மறவரும் வாய்மூழ்த் தனரே; . . . .

இயவரும் அறியாப் பல்லியம் கறங்க,

அன்னோ, பெரும்பே துற்றன்று, இவ் வருங்கடி மூதூர்;

அறன்இலன் மன்ற தானே - விறன்மலை

வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின்

முகைவனப்பு ஏந்திய முற்றா இளமுலைத் . . . .

தகைவளர்த்து எடுத்த நகையொடு,

பகைவளர்த்து இருந்த இப் பண்புஇல் தாயே.

பண்பில் தாயே!

← பாடல் 2434பாடல் 2436 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்