நூல்கள்›புறநானூறு›பாடல் 2434

பாடல் 2434

அடலருந் துப்பின் .. .. .. .. .. .. .. .. ..

.. .. .. .. .. .. .. குருந்தே முல்லை யென்று

இந்நான் கல்லது பூவும் இல்லை;

கருங்கால் வரகே, இருங்கதிர்த் தினையே,

சிறுகொடிக் கொள்ளே, பொறிகிளர் அவரையொடு . . . .

இந்நான் கல்லது உணாவும் இல்லை;

துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று

இந்நான் கல்லது குடியும் இல்லை;

ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி,

ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக், . . . .

கல்லே பரவின் அல்லது,

நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.

கடவுள் இலவே!

← பாடல் 2433பாடல் 2435 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்