பாடல் 2433
காகரு பழனக் கண்பின் அன்ன
தூமயிர்க் குறுந்தாள் நெடுஞ்செவிக் குறுமுயல்,
புன்றலைச் சிறாஅர் மன்றத்து ஆர்ப்பின்,
படப்புஒடுங் கும்மே.. .. .. .. பின்பு .. .. ..
.. .. .. .. .. .. .. .. னூரே மனையோள் . . . .
பாணர் ஆர்த்தவும், பரிசிலர் ஓம்பவும்,
ஊணொலி அரவமொடு கைதூ வாளே;
உயர்மருப்பு யானைப் புகர்முகத்து அணிந்த
பொலம் .. .. .. .. .. .. .. .. .. .. .. ப்
பரிசில் பரிசிலர்க்கு ஈய, . . . .
உரவேற் காளையும் கைதூ வானே.
தூவாள் தூவான்!