நூல்கள்›புறநானூறு›பாடல் 2432

பாடல் 2432

நீருள் பட்ட மாரிப் பேருறை

மொக்குள் அன்ன பொகுட்டுவிழிக் கண்ண,

கரும்பிடர்த் தலைய, பெருஞ்செவிக் குறுமுயல்

உள்ளூர்க் குறும்புதல் துள்ளுவன உகளும்

தொள்ளை மன்றத்து ஆங்கண் படரின், . . . .

உண்கஎன உணரா உயவிற்று ஆயினும்,

தங்கனீர் சென்மோ, புலவீர்! நன்றும்;

சென்றதற் கொண்டு, மனையோள் விரும்பி,

வரகும் தினையும் உள்ளவை எல்லாம்

இரவல் மாக்கள் உணக்கொளத் தீர்ந்தெனக், . . . .

குறித்துமாறு எதிர்ப்பை பெறாஅ மையின்,

குரல்உணங்கு விதைத்தினை உரல்வாய்ப் பெய்து,

சிறிது புறப்பட்டன்றோ விலளே; தன்னூர்

வேட்டக் குடிதொறுங் கூட்டு .. .. .. .. .. .. ..

.. .. .. .. .. .. .. .. .. .. .. .. உடும்பு செய் . . . .

பாணி நெடுந்தேர் வல்லரோடு ஊரா,

வம்பணி யானை வேந்துதலை வரினும்,

உண்பது மன்னும் அதுவே;

பரிசில் மன்னும், குருசில்கொண் டதுவே.

தங்கனிர் சென்மோ புலவீர்!

← பாடல் 2431பாடல் 2433 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்