நூல்கள்›புறநானூறு›பாடல் 2431

பாடல் 2431

பிறர்வேல் போலா தாகி, இவ்வூர்

மறவன் வேலோ பெருந்தகை உடைத்தே;

இரும்புறம் நீறும் ஆடிக், கலந்துஇடைக்

குரம்பைக் கூரைக் கிடக்கினும் கிடக்கும்;

மங்கல மகளிரொடு மாலை சூட்டி, . . . .

இன்குரல் இரும்பை யாழொடு ததும்பத்,

தெண்ணீர்ப் படுவினும் தெருவினும் திரிந்து,

மண்முழுது அழுங்கச் செல்லினும் செல்லும்; ஆங்கு,

இருங்கடல் தானை வேந்தர்

பெருங்களிற்று முகத்தினும் செலவு ஆனாதே . . . .

வேல் பெருந்தகை உடைத்தே!

← பாடல் 2430பாடல் 2432 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்