நூல்கள்›புறநானூறு›பாடல் 2430

பாடல் 2430

கல்லறுத்து இயற்றிய வல்லுவர்க் கூவல்

வில்லேர் வாழ்க்கைச், சீறூர் மதவலி

நனிநல் கூர்ந்தனன் ஆயினும், பனிமிகப்,

புல்லென் மாலைச் சிறுதீ ஞெலியும்

கல்லா இடையன் போலக், குறிப்பின் . . . .

இல்லது படைக்கவும் வல்லன்; உள்ளது

தவச்சிறிது ஆயினும் மிகப்பலர் என்னாள்,

நீள்நெடும் பந்தர் ஊண்முறை ஊட்டும்

இற்பொலி மகடூஉப் போலச், சிற்சில்

வரிசையின் அளக்கவும் வல்லன்; உரிதினின் . . . .

காவல் மன்னர் கடைமுகத்து உகுக்கும்

போகுபலி வெண்சோறு போலத்

தூவவும் வல்லன், அவன் தூவுங் காலே.

இல்லது படைக்க வல்லன்!

← பாடல் 2429பாடல் 2431 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்