பாடல் 2426
எருது கால் உறாஅது, இளைஞர் கொன்ற
சில்விளை வரகின் புல்லென் குப்பை,
தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில்,
பசித்த பாணர் உண்டு கடை தப்பலின்,
ஒக்கல் ஒற்கம் சொலியத், தன்னூர்ச் . . . .
சிறு புல்லாளர் முகத்தவை கூறி
வரகுடன் இரக்கும் நெடுந்தகை,
அரசு வரின், தாங்கும் வல்லாளன்னே.
வரகின் குப்பை!