நூல்கள்›புறநானூறு›பாடல் 2425

பாடல் 2425

ஊர்முது வேலிப் பார்நடை வெருகின்

இருட்பகை வெரீஇய நாகுஇளம் பேடை

உயிர்நடுக் குற்றுப் புலாவிட் டரற்றச்,

சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த

பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்துக், . . . .

கலிர்ப்பூ நெற்றிச் சேவலின் தணியும்

அருமிளை இருக்கை யதுவே - மனைவியும்,

வேட்டச் சிறா அர் சேட்புலம் படராது,

படமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின்

விழுக்குநிணம் பெய்த தயிர்க்கண் மிதவை . . . .

யாணர் நல்லவை பாணரொடு, ஒராங்கு

வருவிருந்து அயரும் விருப்பினள்; கிழவனும்

அருஞ்சமம் ததையத் தாக்கிப், பெருஞ்சமத்து

அண்ணல் யானை அணிந்த

பொன்செய் ஓடைப் பெரும்பரி சிலனே . . . .

பருத்திப் பெண்டின் சிறு தீ!

← பாடல் 2424பாடல் 2426 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்