பாடல் 2427
.. .. டைமுதல் புறவு சேர்ந்திருந்த
புன்புலச் சீறூர், நெல்விளை யாதே;
வரகும் தினையும் உள்ளவை யெல்லாம்
இரவன் மாக்களுக்கு ஈயத் தொலைந்தன;
.. .. .. .. .. .. .. .. .. டமைந் தனனே; . . . .
அன்னன் ஆயினும், பாண! நன்றும்
வள்ளத் திடும்பால் உள்ளுறை தொட .. .. ..
களவுப் புளியன்ன விளை .. .. .. .. .. .. ..
.. .. .. வாடூன் கொழுங்குறை
கொய்குரல் அரிசியொடு நெய்பெய்து அட்டுத், . . . .
துடுப்பொடு சிவணிய களிக்கொள் வெண்சோறு
உண்டு, இனி திருந்த பின் .. .. .. ..
.. .. .. .. .. .. .. .. .. தருகுவன் மாதோ
தாளி முதல் நீடிய சிறுநறு முஞ்ஞை
முயல்வந்து கறிக்கும் முன்றில், . . . .
சீறூர் மன்னனைப் பாடினை செலினே.
ஈயத் தொலைந்தன!