நூல்கள்›புறநானூறு›பாடல் 2419

பாடல் 2419

முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப்,

பந்தர் வேண்டாப் பலர்தூங்கு நீழல்,

கைம்மான் வேட்டுவன் கனைதுயில் மடிந்தெனப்,

பார்வை மடப்பிணை தழீஇப், பிறிதோர்

தீர்தொழில் தனிக்கலை திளைத்துவிளை யாட, . . . .

இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்

கணவன் எழுதலும் அஞ்சிக், கலையே

பிணைவயின் தீர்தலும் அஞ்சி, யாவதும்,

இவ்வழங் காமையின், கல்லென ஒலித்து,

மான்அதட் பெய்த உணங்குதினை வல்சி . . . .

கானக் கோழியொடு இதல்கவர்ந்து உண்டென,

ஆர நெருப்பின், ஆரல் நாறத்

தடிவுஆர்ந் திட்ட முழுவள் ளூரம்

இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குஇனிது அருந்தித்,

தங்கினை சென்மோ, பாண! தங்காது, . . . .

வேந்துதரு விழுக்கூழ் பரிசிலர்க்கு என்றும்

அருகாது ஈயும் வண்மை

உரைசால் நெடுந்தகை ஓம்பும் ஊரே.

கண்ட மனையோள்!

← பாடல் 2418பாடல் 2420 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்