பாடல் 2414
உடையன் ஆயின் உண்ணவும் வல்லன்;
கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும்;
மடவர் மகிழ்துணை; நெடுமான் அஞ்சி;
இல்லிறைச் செரீஇய ஞெலிகோல் போலத்,
தோன்றாது இருக்கவும் வல்லன்; மற்றதன் . . . .
கான்றுபடு கனைஎரி போலத்,
தோன்றவும் வல்லன் - தான் தோன்றுங் காலே.
இல்லிறைச் செரீஇய ஞெலிகோல்!