பாடல் 2413
மனைக்கு விளக்காகிய வாள்நுதல் கணவன்,
முனைக்கு வரம்பாகிய வென்வேல் நெடுந்தகை,
நடுகல் பிறங்கிய உவல்இடு பறந்தலைப்,
புன்காழ் நெல்லி வன்புலச் சீறூர்க்
குடியும் மன்னுந் தானே; கொடியெடுத்து . . . .
நிறையழிந்து எழுதரு தானைக்குச்
சிறையும் தானே - தன் இறைவிழு முறினே.
மனைக்கு விளக்கு!