நூல்கள்›புறநானூறு›பாடல் 2415

பாடல் 2415

கள்ளின் வாழ்த்திக், கள்ளின் வாழ்த்திக்,

காட்டொடு மிடைந்த சீயா முன்றில்,

நாட்செருக்கு அனந்தர்த் துஞ்சு வோனே!

அவன் எம் இறைவன்; யாம்அவன் பாணர்;

நெருநை வந்த விருந்திற்கு மற்றுத் தன் . . . .

இரும்புடைப் பழவாள் வைத்தனன்; இன்றுஇக்

கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்; இதுகொண்டு

ஈவது இலாளன் என்னாது, நீயும்;

வள்ளி மருங்குல் வயங்குஇழை அணியக்,

கள்ளுடைக் கலத்தேம் யாம்மகிழ் தூங்கச், . . . .

சென்று வாய் சிவந்துமேல் வருக

சிறுகண் யானை வேந்து விழுமுறவே.

சீறியாழ் பனையம்!

← பாடல் 2414பாடல் 2416 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்