நூல்கள்›புறநானூறு›பாடல் 2403

பாடல் 2403

கொடுங்குழை மகளிர் கோதை சூட்டி,

நடுங்குபனிக் களைஇயர் நாரரி பருகி,

வளிதொழில் ஒழிக்கும் வண்பரிப் புரவி

பண்ணற்கு விரைதி, நீயே; நெருநை

எம்முன் தப்பியோன் தம்பியொடு, ஓராங்கு . . . .

நாளைச் செய்குவென் அமர் எனக் கூறிப்,

புன்வயிறு அருத்தலும் செல்லான், வன்மான்

கடவும் என்ப, பெரிதே; அது கேட்டு,

வலம்படு முரசின் வெல்போர் வேந்தன்

இலங்கு இரும் பாசறை நடுங்கின்று; . . . .

இரண்டா காது அவன் கூறியது எனவே.

எம்முன் தப்பியோன்!

← பாடல் 2402பாடல் 2404 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்