நூல்கள்›புறநானூறு›பாடல் 2394

பாடல் 2394

கடல்கிளர்ந் தன்ன கட்டூர் நாப்பண்,

வெந்துவாய் மடித்து வேல்தலைப் பெயரித்,

தோடுஉகைத்து எழுதரூஉ, துரந்துஎறி ஞாட்பின்,

வருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி,

இடைப்படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய, . . . .

சிறப்புடை யாளன் மாண்புகண் டருவி,

வாடுமலை ஊறிச் சுரந்தன

ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே.

ஊறிச் சுரந்தது!

← பாடல் 2393பாடல் 2395 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்