நூல்கள்›புறநானூறு›பாடல் 2393

பாடல் 2393

வெண்குடை மதியம் மேல்நிலாத் திகழ்தரக்;

கண்கூடு இறுத்த கடல்மருள் பாசறைக்,

குமரிப்படை தழீஇய கூற்றுவினை ஆடவர்

தமர்பிறர் அறியா அமர்மயங்கு அழுவத்து,

இறையும் பெயரும் தோற்றி, நுமருள் . . . .

நாள்முறை தபுத்தீர் வம்மின், ஈங்கு எனப்

போர்மலைந்து ஒருசிறை நிற்ப, யாவரும்

அரவுஉமிழ் மணியின் குறுகார்;

நிரைதார் மார்பின்நின் கேள்வனைப் பிறரே.

வம்மின் ஈங்கு!

← பாடல் 2392பாடல் 2394 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்