நூல்கள்›புறநானூறு›பாடல் 2390

பாடல் 2390

சிறாஅஅர்! துடியர்! பாடுவல் மகாஅஅர்;

தூவெள் அறுவை மாயோற் குறுகி

இரும்புள் பூசல் ஓம்புமின்; யானும்,

விளரிக் கொட்பின், வெண்ணரி கடிகுவென்;

என்போற் பெருவிதுப்பு உறுக, வேந்தே . . . .

கொன்னும் சாதல் வெய்யோற்குத் தன்தலை!

மணிமருள் மாலை சூட்டி, அவன் தலை

ஒருகாழ் மாலை தான்மலைந் தனனே!

மாலை மலைந்தனனே!

← பாடல் 2389பாடல் 2391 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்