பாடல் 2389
இவற்குஈந்து உண்மதி, கள்ளே; சினப்போர்
இனக்களிற்று யானை - இயல்தேர்க் குருசில்!
நுந்தை தந்தைக்கு இவன்தந்தை தந்தை,
எடுத்துஎறி ஞாட்பின் இமையான், தச்சன்
அடுத்துஎறி குறட்டின், நின்று மாய்ந் தனனே . . . .
மறப்புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும்,
உறைப்புழி ஓலை போல
மறைக்குவன் - பெரும! நிற் குறித்துவரு வேலே.
மறப்புகழ் நிறைந்தோன்!