நூல்கள்›புறநானூறு›பாடல் 2388

பாடல் 2388

ஈரச் செவ்வி உதவின ஆயினும்,

பல்எருத் துள்ளும் நல் எருது நோக்கி,

வீறுவீறு ஆயும் உழவன் போலப்,

பீடுபெறு தொல்குடிப் பாடுபல தங்கிய

மூதி லாளர் உள்ளும், காதலின் . . . .

தனக்கு முகந்து ஏந்திய பசும்பொன் மண்டை,

இவற்கு ஈக! என்னும்; அதுவும்அன் றிசினே;

கேட்டியோ வாழி - பாண! பாசறைப்,

பூக்கோள் இன்று என்று அறையும்

மடிவாய்த் தண்ணுமை இழிசினன் குரலே? . . . .

ஆயும் உழவன்!

← பாடல் 2387பாடல் 2389 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்