நூல்கள்›புறநானூறு›பாடல் 2387

பாடல் 2387

மண்கொள வரிந்த வைந்நுதி மறுப்பின்

அண்ணல் நல்ஏறு இரண்டு உடன் மடுத்து,

வென்றதன் பச்சை சீவாது போர்த்த

திண்பிணி முரசம் இடைப்புலத்து இரங்க,

ஆர்அமர் மயங்கிய ஞாட்பின், தெறுவர, . . . .

நெடுவேல் பாய்ந்த நாணுடை நெஞ்சத்து,

அருகுகை .. .. .. .. .. .. .. .. .. .. .. மன்ற

குருதியொடு துயல்வரும் மார்பின்

முயக்கிடை ஈயாது மொய்த்தன, பருந்தே.

மொய்த்தன பருந்தே!

← பாடல் 2386பாடல் 2388 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்