பாடல் 2383
வருகதில் வல்லே; வருகதில் வல் என
வேந்துவிடு விழுத்தூது ஆங்காங்கு இசைப்ப,
நூலரி மாலை சூடிக், காலின்,
தமியன் வந்த மூதி லாளன்
அருஞ்சமம் தாங்கி, முன்னின்று எறிந்த . . . .
ஒருகை இரும்பிணத்து எயிறு மிறையாகத்
திரிந்த வாய்வாள் திருத்தாத்,
தனக்குஇரிந் தானைப் பெயர்புறம் நகுமே.
பெயர்புற நகுமே!