பாடல் 2384
பாசறை யீரே! பாசறை யீரே!
துடியன் கையது வேலே; அடிபுணர்
வாங்குஇரு மருப்பின் தீந்தொடைச் சீறியாழ்ப்
பாணன் கையது தோலே; காண்வரக்
கடுந்தெற்று மூடையின்.................... . . . .
வாடிய மாலை மலைந்த சென்னியன்;
வேந்துதொழில் அயரும் அருந்தலைச் சுற்றமொடு
நெடுநகர் வந்தென, விடுகணை மொசித்த
மூரி வேண்டோள் .........................
சேறுபடு குருதிச் செம்மலுக் கோஒ! . . . .
மாறுசெறு நெடுவேல் மார்புஉளம் போக;
நிணம்பொதி கழலொடு நிலம் சேர்ந் தனனெ;
அதுகண்டு, பரந்தோர் எல்லாம் - புகழத் தலைபணிந்து
இறைஞ்சி யோனே, குருசில்! - பிணங்குகதிர்
அலமரும் கழனித் தண்ணடை ஒழிய; . . . .
இலம்பாடு ஒக்கல் தலைவற்குஓர்
கரம்பைச் சீறூர் நல்கினன் எனவே.
தலைபணிந்து இறைஞ்சியோன்!