நூல்கள்›புறநானூறு›பாடல் 2382

பாடல் 2382

ஒண்செங் குரலித் தண்கயம் கலங்கி,

வாளை நீர்நாய் நாள்இரை பெறூஉப்

பெறாஅ உறையரா வராஅலின் மயங்கி

மாறுகொள் முதலையொடு ஊழ்மாறு பெயரும்

அழும்பிலன் அடங்கான் தகையும் என்றும், . . . .

வலம்புரி கோசர் அவைக்களத் தானும்,

மன்றுள் என்பது கெட .. .. .. .. னே பாங்கற்கு

ஆர்சூழ் குவட்டின் வேல்நிறத்து இங்க,

உயிர்புறப் படாஅ அளவைத் தெறுவரத்,

தெற்றிப் பாவை திணிமணல் அயரும், . . . .

மென்தோள் மகளிர் நன்று புரப்ப,

.. .. .. .. .. .. .. .. ண்ட பாசிலைக்

கமழ்பூந் தும்பை நுதல் அசைத் தோனே.

அழும்பிலன் அடங்கான்!

← பாடல் 2381பாடல் 2383 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்