நூல்கள்›புறநானூறு›பாடல் 2381

பாடல் 2381

எஃகுஉளம் கழிய இருநில மருங்கின்

அருங்கடன் இறுத்த பெருஞ்செ யாளனை,

யாண்டுளனோ? வென, வினவுதி ஆயின்,

. . . . . . . . . . . . . . . . . . . . . . . .

வருபடை தாங்கிக் கிளர்தார் அகலம் . . . .

அருங்கடன் இறுமார் வயவர் எறிய,

உடம்பும் தோன்றா உயிர்கெட் டன்றே,

மலையுநர் மடங்கி மாறுஎதிர் கழியத்

. . . . . . . . . . . . . . . . . . . . . . . .

அலகை போகிச் சிதைந்து வேறு ஆகிய . . . .

பலகை அல்லது, களத்துஒழி யதே;

சேண்விளங்கு நல்லிசை நிறீஇ,

நாநவில் புலவர் வாய் உளானே.

புலவர் வாயுளானே!

← பாடல் 2380பாடல் 2382 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்