பாடல் 2378
கெடுக சிந்தை, கடிது இவள் துணிவே,
மூதின் மகளிர் ஆதல் தகுமே,
மேல் நாள் உற்ற செருவிற்கு, இவள் தன் ஐ
யானை எறிந்து களத்து ஒழிந்தன்னே,
நெருநல் உற்ற செருவிற்கு, இவள் கொழுநன் . . . .
பெரு நிரை விலக்கி ஆண்டுப்பட்டனனே,
இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று, மயங்கி
வேல் கைக் கொடுத்து வெளிது விரித்து உடீஇப
பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒரு மகன் அல்லது இல்லோள் . . . .
செருமுக நோக்கிச் செல்க, என விடுமே.
செல்கென விடுமே!