பாடல் 2377
நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மென்தோள்,
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்,
படை அழிந்து மாறினன் என்று பலர் கூற,
மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்ட என்
முலை அறுத்திடுவென் யான் எனச் சினைஇக், . . . .
கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்
செங்களம் துழவுவோள் சிதைந்து வேறாகிய
படுமகன் கிடக்கை காணூஉ,
ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே.
பெரிது உவந்தனளே!