பாடல் 2376
மீன் உண் கொக்கின் தூவி அன்ன,
வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்,
களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே, கண்ணீர்
நோன் கழை துயல்வரும் வெதிரத்து . . . .
வான் பெயத் தூங்கிய சிதரினும் பலவே.
சிதரினும் பலவே!