பாடல் 2372
மாவா ராதே; மாவா ராதே;
எல்லார் மாவும் வந்தன; எம்இல்,
புல்லுளைக் குடுமிப் புதல்வற் றந்த
செல்வன் ஊரும் மாவா ராதே
இருபேர் யாற்ற ஒருபெருங் கூடல் . . . .
விலங்கிடு பெருமரம் போல,
உலந்தன்று கொல்; அவன் மலைந்த மாவே?
கூடல் பெருமரம்!