பாடல் 2371
மணி துணர்ந்தன்ன மாக்குரல் நொச்சி!
போது விரி பன் மரனுள்ளும் சிறந்த
காதல் நன் மரம் நீ, மற்றிசினே,
கடி உடை வியன் நகர்க் காண்வரப் பொலிந்த
தொடி உடை மகளிர் அல்குலும் கிடத்தி, . . . .
காப்புடைப் புரிசை புக்குமாறு அழித்தலின்,
ஊர்ப் புறங்கொடாஅ நெடுந்தகை
பீடு கெழு சென்னிக் கிழமையும் நினதே.
கிழமையும் நினதே!