நூல்கள்›புறநானூறு›பாடல் 2370

பாடல் 2370

நீரறவு அறியா நிலமுதற் கலந்த

கருங்குரல் நொச்சிக் கண்ணார் குரூஉத்தழை,

மெல்இழை மகளிர் ஐதகல் அல்குல்,

தொடலை ஆகவும் கண்டனம்; இனியே,

வெருவரு குருதியொடு மயங்கி, உருவுகரந்து, . . . .

ஒறுவாய்ப் பட்ட தெரியல் ஊன்செத்துப்,

பருந்துகொண்டு உகப்பயாம் கண்டனம்

மறம்புகல் மைந்தன் மலைந்த மாறே!

மைந்தன் மலைந்த மாறே!

← பாடல் 2369பாடல் 2371 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்